586. | திருவின் நாயக னாகிய மாலுக் | | கருள்கள் செய்திடும் தேவர் பிரானை | | உருவி னானைஒன் றாஅறி வொண்ணா | | மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான் | | செருவில் லேந்திஓர் கேழற்பின் சென்று | | செங்கண் வேடனாய் என்னொடும் வந்து | | மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர் | | மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | | 6 |
எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: ஏனைய திருப்பாடல்களிற்போல, இத்திருப்பாடலிலும், "மணாளன்" முதலிய பெயர்களிலெல்லாம், இரண்டனுருபு விரிக்க. 'செற்று' என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. கோத்து அணிதற்பொருட்டு, எலும்பு, துளையிடப்படுவதாயிற்று. தோல், பூணூலில் முடியப்படுவது; இது, பிரமசாரி யாதலை உணர்த்தும். "மூன்றும்" எனப் பின்னர் வருகின்றமையின், "திரிபுரம்" என்றது வினைத்தொகை. "திரியும் முப்புரம்" எனப்பின்னரும் (தி. 7 ப. 61 பா. 3) வரும். இவ்விருவகையானும் முப்புரச் செய்தி, திருமுறைகளிற் பயின்று வருதல் அறிந்துகொள்க. 6. பொ-ரை: திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த, தேவர் தலைவனும், உருவம் உடையவனும், அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது, அளவற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரியவில் ஒன்றை ஏந்திக்கொண்டு, ஒரு பன்றியின்பின்னே, சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவனும், என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: திருமாலுக்கு எல்லாப் பிறப்புக்களிலும், இராம கிருட்டின பிறப்புக்களில் பல பொழுதுகளிலும் பல்வேறு நலங்களை அருள் செய்தமையின், "அருள்கள் செய்திடும் தேவர்பிரான்" என்றார். அவ்வாறு செய்த திருவருட் செயல்களை எல்லாம் சிவ புராணங்களிலும், இராமாயண பாரத இதிகாசங்களிலும் இனி
|