பக்கம் எண் :

904
 
587.எந்தை யைஎந்தை தந்தை பிரானை

ஏதமா யவ்விடர் தீர்க்க வல்லானை

முந்தை யாகிய மூவரின் மிக்க

மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக்

கந்தின்மிக் ககரி யின்மருப் போடு

கார கில்கவ ரிம்மயிர் மண்ணி

வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்

மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.

7

588.தேனை யாடிய கொன்றையி னானைத்

தேவர் கைதொழுந் தேவர் பிரானை

ஊன மாயின தீர்க்கவல் லானை

ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்



துணர்ந்துகொள்க. ஈண்டு விரிக்கிற் பெருகும். "உருவினானை" என்றதன்பின், 'அவ்வுரு' என்பது வருவிக்க. "சென்று" என்னும் எச்சம், எண்ணின்கண் வந்தது. "என்னொடும்" என்னும் உம்மை, 'அருச்சுனனிடம் சென்றதேயன்றி" என, இறந்தது தழுவி நின்றது.

7. பொ-ரை: என் தந்தையும், என் தந்தை தந்தைக்கும் தலைவனும், துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும், யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, மண்ணியாறு வழியாக, தறியிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும், கரிய அகிற் கட்டைகளும், கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

கு-ரை: "முந்தை" என்னும் இடைச்சொல் பெயர்த்தன்மைத்தாய், அதன்கண் தோன்றியவரை உணர்த்திற்று. 'சிவபிரான், மூவரின் மேலானவன்' என்பது மேலே காட்டப்பட்டது. (தி. 7 ப. 38 பா. 4) தோற்றம் இன்மையின், அஃது அறியப்படாதாயிற்று; 'மண்ணியால்' என உருபு விரிக்க. 'மண்ணி - அலங்கரித்து' என்பாரும் உளர்.

8. பொ-ரை: தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும், தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும்