| கான வானையின் கொம்பினைப் பீழ்ந்த | | கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய | | வான நாடனை வாழ்கொளி புத்தூர் | | மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | | 8 |
589. | காளை யாகி வரையெடுத் தான்றன் | | கைக ளிற்றவன் மொய்தலை யெல்லாம் | | மூளை போத ஒருவிரல் வைத்த | | மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப் | | பாளை தெங்கின் பழம்விழ மண்டிச் | | செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும் | | வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர் | | மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | | 9 |
குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும், ஒற்றை எருதை உடையவனும், நெற்றிக்கண்ணை உடையவனும், காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும், வானுலகத்தில் வாழ்பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: திருமால் கண்ணனாய் இருந்தபொழுது, தன்னைக் கொல்லும் பொருட்டு, 'கஞ்சன்' என்னும் மாமன் நிறுத்திவைத்த, 'குவலயாபீடம்' என்னும் யானையை, அதன் கொம்பைப் பிளந்து அழித்த வரலாற்றைப் பாகவதத்துட் காண்க. 9. பொ-ரை: காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து, நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ, சிவந்த கண்களையுடைய எருமைகள், நெருங்கிச் சேறுசெய்ய, எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
|