591. | மெய்யனை மெய்யில் நின்றுணர் வானை | | மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம் | | பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப் | | புனித னைப்புலித் தோலுடை யானைச் | | செய்ய னைவெளி யதிரு நீற்றில் | | திகழு மேனியன் மான்மறி யேந்தும் | | மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர் | | மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. | | 11 |
592. | வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் | | மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேன்என் | | றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன் | | சடையன் காதலன் வனப்பகை யப்பன் |
11. பொ-ரை: என்றும் ஓர் அழிவில்லாதவனும், மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும், அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல்லாம் உணரப்படாதவனும், முப்புரங்களை எரித்தவனும், குற்றமில்லாதவனும், புலித்தோலாகிய உடையை உடையவனும், சிவந்த நிறம் உடையதாய், வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும், மான்கன்றை ஏந்துகின்ற, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன். கு-ரை: மெய்ம்மையாவது, அவனை உணர்தலே கருத்தாதல்; அக்கருத்தினைப் பல்வேறு நிலையவாய் நின்று விலக்குவன மலசத்திகளாதலின், அவற்றால் அக்கருத்தினை இழந்து வேறுபட்டோரால் அவன் உணரப்படானாயினான் என்க. முப்புரம் எரித்தமை, அம்மல சத்திகளை அழிப்பவனாதலையும், புனிதனாதல், அச்சத்திகளால் அணுகப்படாதவனாதலையும் விளக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன; ஏனையவும் அவ்வாறியைந்து நிற்றலை நுண்ணுணர்வான் உணர்ந்து கொள்க. "செய்யனை" என்றதற்குக் கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது. "மேனியன்" என்றவிடத்தும், இரண்டனுருபு விரித்துக்கொள்க. 12. பொ-ரை: வன்றொண்டனும், சடையனார் மகனும், வனப்பகை, சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும், விளைவு
|