பக்கம் எண் :

909
 

58. திருக்கழுமலம்

பதிக வரலாறு:

சுவாமிகள், தில்லையில் கூத்தப்பெருமான் திருக் கூத்தில் திளைத்துப் பரவித் திருவாரூர் செல்லும் பொழுது, உமையம்மை தந்தருளிய திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவராகிய திருஞானசம்பந்தர் பிறந்தருளும் பெரும் பேறு பெற்ற திருக்கழுமலம் அணைந்து, 'ஆளுடைய பிள்ளையார் திரு அவதாரம் செய்த தலத்துள்ளும் மிதியேன்' என்று எல்லையில் நின்று வணங்கி, வலமாக வரும்பொழுது, பெருமான் காட்சி கொடுக்கக் கண்டு, "கழுமல வளநகர்க் கண்டுகொண்டேன்" என்று பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 தடுத்தாட். புரா. 113)

குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: தக்கேசி

பதிக எண்: 58

திருச்சிற்றம்பலம்

593.சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்

தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்

மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை

வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை

ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை

எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்

காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

1


1. பொ-ரை: இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும், பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனையும் விலக்கி, இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து, அவ்வாற்றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளியவனும், மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும், வானினின்றும் வந்த வெள்ளத்தை் சடையிடையில் வைத்தருளினவனும், அயலதாகிய என் நெஞ்சிற்கு, அயலாகாது, காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல,