ஏட்டிலும் எழுத்திலும் அடங்காதன. அவை வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் திருவடிகட்கும், அவற்றையடைந்த அருளாளர் திருவடிகட்கும் நம்மையாற்றுப் படுத்துவன; ஆதலின், உயிர்த் துணை என்று நம்மாற் போற்றி ஒழுகத் தக்கனவாம்.1 ஆளுடைய நம்பிகள்: ஏழாம் திருமுறையை அருளிய அருளாசிரியர் சுந்தரர் பெருமான். இவர் பெருங்கவிஞர்பிரான்; திருவருட் செல்வம் நிரம்பப் பெற்று இறைவனைத் தமிழாற் பிணித்த தம்பிரான் தோழர்; நாவலூரிற் பிறந்த நலமும், நாவலர் பலர்க்கும் நாயகராம் தலைமையும் பெற்ற நாவலர் காவலர்; சிவபிரானுக்கு வன்மை பேசுவார் போல மென்மை பேசும் திருவருள் வீறுடைய வன்றொண்டர்; தேசம் உய்ய, உலகுய்யத் திருத்தொண்டத் தொகை முன் பணித்த திருவாளர்; இவ்வருளாளர் திருவடியை வணங்குதற்கு உதவியாக வந்த பிறப்பையே வணங்குவோம் என்று சேக்கிழார் கூறுதற்கேற்ற 2ஞானச்செம்மலார். இவர்தம் வாழ்வும் வாக்கும் ஆகியவற்றைத் திட்பமும் நுட்பமும் செறிய அருங் காப்பியமாகச் சேக்கிழார் செய்தனர்; எனவே 'திருத் தொண்டர்புராணம்' எனின், அங்ஙனம் திருத்தொண்டர் என்ற பொதுப் பெயரானே சுந்தரர் பிரான் போற்றப் பெற்றமை தெளிவு, "ஆளுடைய நம்பிகள் ஸ்ரீ புராணம் என்றே கல்வெட்டுக்களிற் காணப்பெறுதலும் அறிஞர் விளக்கிய ஒன்றே.3 மூலஇலக்கியம்: சுந்தரர் செந்தமிழ் இன்றேல் நாம் இன்று சைவ நாயன்மார் வரலாற்றை அறியச் சிறிதும் வாய்ப்பு இல்லை. திருத்தொண்டத்
1. It is not mere emotionalism that we find in the hymns of these saints; it is a religion of universal brotherhood and service. 2. Where God, as unified Father and Mother, the Lord of Kailas, is not seen on the distant Peak but in the form of every loving couple of living beings,......................harmonising love and service." - Prof. T.P.M.'s Sixty first Commemoration Volume, 1961-p.45. 3. The Development of Saivism in South India - Dr. M. Rajamanickkam - Dharmapura Adhinam - 1964.pp.211-213.
|