"பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் | பாதமெல்லாம் | நாலஞ்சு புள்ளினம் ஏந்தின" |
"நிலையும் பெருமையும் நீதியும் சால அழகுடைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தஇத் தோணிபுரம்" "முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த் தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படுகின்றது..................கழுமலமே" (தி. 4 ப. 82 பா. 1, 6, 7) எனவும் அருளிச்செய்தனர், முன்னை அருளாசிரியரும். கழுமலமே பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களை உடைத்தாதலை, "பிரமனூர் வேணு புரம்புகலி வெங்குருப் | பெருநீர்த் தோணி | புரம்மன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் | புறவஞ் சண்பை | அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங் | காதி யாய | பதமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் | பரவும் ஊரே" |
(தி. 2 ப. 70 பா. 1)
என்றற் றொடக்கத்துத் திருஞானசம்பந்தர் திருமொழிகளாலும், "பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப் பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்முன் வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்" |
(தி. 12 திருஞா. பு. 14) என்னும் சேக்கிழார் திருமொழியாலும் உணர்க. 'கழுமல வளநகர்' என, சேயதுபோலச் செய்யுள் வழக்குப்பற்றி அருளினாராயினும், 'இந்நகர்' எனச் சுட்டியுரைத்தலே திருவுள்ளம். இது திருப்பதிகங்கள் பலவற்றிற்கும் ஒக்கும். பெற்றுக்கொண்டேன், ஏற்றுக்கொண்டேன் என்பதுபோல,
|