594. | மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன் | | வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன் | | சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் | | துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை | | முத்தியும் ஞானமும் வானவ ரறியா | | முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக் | | கற்பனை கற்பித்த கடவுளை யடியேன் | | கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | | 2 |
'கண்டுகொண்டேன்' என்பது ஒருசொல். மேற்காட்டியவை அனைத்தினுள்ளும், 'கொள்' என்பது துணைவினையாய் நின்று, முதனிலையது பொருளை வலியுறுத்து நிற்கும். "கண்டுகொண்டேன்" என்றது, 'கயிலையிலிருந்தவாறே கண்டுகொண்டேன்' என்னும் குறிப்பினது என்பதை, சேக்கிழார் திருமொழியான் அறிக. 2. பொ-ரை: சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது, 'இவனே துணை' என்று தெளிந்து, நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற, ஒளியையுடைய விளக்குப் போல்பவனும், வீடாவதும், ஞானமாவதும், அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த, தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்பதனைப் படிமுறையானே அறிவித்து, மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன்; அதனால், முன்பு அவனை மறந்து வருந்திய யான், இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன்; ஆகவே, இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன். கு-ரை: "மறுமைக்கும்" என்ற உம்மை, எச்சத்தொடு சிறப்பு, மறந்து வருந்தியது சித்தவடமடத்தில் என்க. "தொழப்பட்ட" என்றது, இருசொல்லாய் நிற்றலின், 'நான்' என்றது, "தொழ" என்றதனோடு முடிந்தது. "தொழப்பட்ட" என்றது, 'தொழப்படுந் தன்மையைப் பெற்ற' என்றவாறு. தேவர், உயர்பிறப்பிற்கு உரிய வழியையே அறிதலின், பிறவி நீங்கும் வழி, அவர்களால் அறியப்படாதாயிற்று. படி முறையானே பலபல நெறிகளையும் சுவாமிகள் கண்டது நெடுங் காலத்திற்கு முன்னர்த்தாயினும், அவ்வருமையையும் ஈண்டு நினைந்து அருளிச்செய்தார் என்க. "கற்பனை" என்றது, 'நினைவு'
|