596. | மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை | | வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன் | | பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் | | பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார் | | குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே | | பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன் | | கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்e | | கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | | 4 |
597. | குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங் | | கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும் | | வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும் | | வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே |
4. பொ-ரை: மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின், யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன்; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன்; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார்! இவ்வாறாதலின், அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும், இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன்; என்றாலும், அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின், காதிற் குழையையுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன்; இந்நிலையில் அவனை, இதுபோழ்து, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கழைக் கரும்பும், வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன்; இனியொரு குறையும் இலனாயினேன். கு-ரை: "மழைக்கு என்றது உருபு மயக்கம். "மழைக்கு அரும்பும் கொன்றை" என்றது, 'கார்க்கொன்றை' என்றவாறு. கழை, கரும்பின் வேறுபாடு. "கதலி, சோலை" என்பவற் றிடத்து வேண்டும் சொற்களை விரிக்க. 5. பொ-ரை: யான், உறக்கத்தில், 'குண்டலமும், குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே' என்றும், 'கொடிய மழுவாகிய
|