பக்கம் எண் :

915
 

பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்

பசுபதி பதிவின விப்பல நாளுங்

கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

5

598.வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி

வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்

விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி

வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே

அரும்பினை அலரினை அமுதினைத் தேனை

ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங்

கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்

கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.

6


ஒளியையுடைய படையை உடையவனே' என்றும், 'வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரைச் சூடியவனே' என்றும் வாய்பிதற்றி, விழித்த பின், பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய், அவனது தலங்களை வினாவி அறிந்து, 'அத்தலத்திற் கிடைப்பான்' என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன்; அவ்வாற்றால் வருமிடத்து, தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்தே அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன்; இனி, அக் குறையிலேனாயினேன்.

கு-ரை: குண்டலம், ஆசிரியக் கோலத்தையும், குழை மணவாளக் கோலத்தையும் காட்டும் என்க. மகளிரை, 'கனங்குழையார்' என்பவாகலின், மகளிர்க்கு உரித்தாம் வேறுபாட்டினையுடைய குழையும் உண்மை பெறப்படுதலால், இறைவிக்கு உரிய குழையினையே ஈண்டு அருளினார் என்றலுமாம். முன்னின்றாரை நோக்கியும் அருளிச் செய்கின்றாராகலின், "நம் மனம்" என்று அருளினார். நினைவின் பன்மையும், ஒருமையும், மனத்திற்கு ஆக்கப்பட்டன. "ஒன்றாய்" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. "பசுபதி" என்றது, சுட்டுப் பெயரளவாய் நின்றது.

6. பொ-ரை: 'அளவற்ற வலிய வினைகள் வந்து வருத்துமே; என் செய்வது' என்று எண்ணியிருந்து வருந்தினேன்; அங்ஙனம் வருந்தாதபடி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன்; அதனால்,