| புனைதரு புகழினை எங்கள தொளியை | | இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக் | | கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங் | | கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | | 8 |
601. | மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப | | வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத் | | துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த | | துன்மை யெனுந்தக வின்மையை யோரேன் | | பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் | | பேரரு ளாளனைக் காரிருள் போன்ற | | கறையணி மிடறுடை யடிகளை அடியேன் | | கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. | | 9 |
கையால் தொழுதும் எழப்பட்ட, ஒளி பொருந்திய ஞாயிறு போல்பவனும், தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும், தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும், எங்கள் விளக்குப் போல்பவனும், மாலும் அயனும், 'இன்னன்' என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன். கு-ரை: பாவத்தினது பன்மையால், அதனது நாசமும் பலவாயின. எழுதல். செயப்படுபொருள் குன்றிய வினையாயினும், நினைதல் தொழுதல்களோடு ஒட்டிநின்று, செயப்படுபொருள் குன்றாதாயிற்று. 'எமக்கு, பிறரெல்லாம் காலையில் தொழுதெழுகின்ற ஞாயிராய் உள்ளவன்' என்றல் திருவுள்ளமாகலின், சுடர், ஞாயிறாயிற்று. 'மலைதரு' என்பது பாடம் அன்மை, எதுகை இன்மையானே விளங்கும். அழகியவாதல் மெய்ம்மையவாதல். "ஒருவன்" என்றது, 'வரையறைப்படுத்து உணரப்படுபவன்' என்றபடி. 9. பொ-ரை: வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும், முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து
|