602. | செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் | | விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட் | | டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் | | அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங் |
போதலும் கண்கூடாய் இருக்க, அவற்றை மேற்கொண்டவர்கள், தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது, நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி, பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை, யான் பொருட்படுத்தாது வந்து, பிறையை யுடைய சடையை உடையவனும், எங்கள் தலைவனும், கருணையை மிக உடையவனும், ஆகிய சிவபெருமானை அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிடத்துக் கண்டுகொண்டேன். கு-ரை: 'வேதவுள்ளுறை, வேதமுடிவு, அருமறை' முதலியன போலக் கிளந்தோதாதவழி, 'மறை' என்பது, அதன் கன்ம காண்டத்தைக் குறித்தலே பெரும்பான்மை. கன்ம காண்டத்தின் வழிநிற்போர், மீமாஞ்சகர், அவர், 'காமிய கன்மமே பிறப்பைத்தரும்; நிட்காமிய கன்மம் வீடுபேற்றைத் தரும்' எனக் கூறினாராயினும், காமிய இன்பத்தின் மேலாயதோர் இன்பத்தை யுணராமையின், நிட்காமியம் செய்யமாட்டாது காமியத்துள்ளே அழுந்தலின், "மறையிடைத்துணிந்தவர் மனையிடையிருப்ப" எனவும், சமணரும், சாக்கியரும், 'இல்லறம் எவ்வாற்றானும் வீடு பயவாமையின், துறவறமே மேற்கொள்ளத் தக்கது' எனக்கொண்டு, துறவையே விரும்பிநிற்பாராயினும், பற்றற்றான் பற்றினைப் பற்ற மாட்டாமையின், எல்லாப் பற்றிற்கு அடியாய தம் முனைப்பு அறாராகலின், அவரை, போலித் துறவிகளாக வைத்து, "வஞ்சனை செய்தவர்" என்றும், அவர் துறவொழுக்கங்களாகக் கொண்டு ஒழுகுவனவெல்லாம், இறைவன் திருத்தொண்டின்முன், பயனால், கதிர்முன் இருள்போற் கெட்டொழிதலின், அவற்றை, "பொய்" என்றும், "கையுள் மாய" என்றும் அருளினார். மீமாஞ்சகரது தன்மையை, தாருகாவன முனிவர்கள் வரலாற்றானும், சமண சாக்கியரது தன்மையை, ஞானசம்பந்தர் நாவுக்கரசரோடு அவரிடை நிகழ்ந்த நிகழ்ச்சிகளானும் நன்குணர்க. கை - சிறுமை; அஃது அவ்வளவினதாகிய காலத்தை உணர்த்திற்று. "துன்மை" என்பது, 'துர்' என்பது அடியாக ஆக்கப்
|