604. | கட்ட மும்பிணி யுங்களை வானைக் | | காலற் சீறிய காலுடை யானை | | விட்ட வேட்கைவெந் நோய்களை வானை | | விரவி னால்விடு தற்கரி யானைப் | | பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை | | வாரா மேதவி ரப்பணிப் பானை | | அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை | | ஆரூ ரானை மறக்கலு மாமே. | | 2 |
அருமையை நினைகின்றாராதலின், "மெய்ப்பொருளும்" என வேறு போல அருளினார். "போகமும் திருவும்" என்றது, நிரல்நிறை. எனவே, 'திரு' என்பது வீட்டின்பமாதல் உணர்க. உலகின்பத்தை நுகரும்பொழுது செய்யும் பிழையாவது, இறைவனை மறந்து, முன்னிலைப் பொருள்களையே நினைந்து, விருப்பும், வெறுப்புங்கொள்ளுதல். வீட்டின்பத்தை நுகரும்பொழுது செய்யும் பிழையாவது, பாற்கலன்மேற் பூஞை கரப்பருந்த நாடுதல்போல, அப்பேரின் பத்தையே நுகர்ந்திராது, சிற்றின்பத்தை விரும்புதல், இவை இரண்டும் பண்டைப் பழக்கம் பற்றி நிகழ்வன. இப்பழக்கத்தைத் தன் அடியார்க்கு இறைவன் பலவாற்றால் அறவே நீக்கியருளுவான் என்க. அளவிறந்த தன்மையன் ஆதலின், "இன்னதன்மையன் என்றறிவொண்ணா எம்மான்" என்றும், அத்தன்மையனாயினும், தமக்கு எளிதில் பலகாலும் வெளிநின்றமையின், 'எளிவந்தபிரான்' என்றும் அருளினார். "மறக்கலும்" என்னும் உம்மை. இழிவு சிறப்பு. 2. பொ-ரை: மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்றவனும், கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும், கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும், வந்த பழிச் சொல்லும், வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும், அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய, மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ! கு-ரை: விரவினால் விடுதற்கு அரியனாதல், பேரின்பவடிவின னாதலால் என்க. "மேவினார் பிரியமாட்டார் விமலனார்" என்ற தி. 12 கண்ணப்பர் புராண (174)த்தையும் நோக்குக. பழிச்சொல், உண்மையுணராது கூறுவாரது சொற்கள், அவை இறைவன், சுவாமிகளது
|