பக்கம் எண் :

925
 
605.கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்

கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்

பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்

பகலுங் கங்குலு மாகிநின் றானை

ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை

யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை

ஆர்க்கின் றகட லைமலை தன்னை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

3

606.செத்த போதினில் முன்னின்று நம்மைச்

சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்

வைத்த சிந்தையுண் டேமன முண்டே

மதியுண் டேவிதி யின்பய னுண்டே.



பெருமையை விளங்கச் செய்யும்பொழுது அவரைப் பற்ற மாட்டாது ஒழியும் என்க.

3. பொ-ரை: மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும், நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று, காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஓசையைக் கேட்கின்ற செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற கடலாகியும், மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!

கு-ரை: உயிர் காணப்படுவதன்றாயினும், உடல் வழியாக உண்மை புலப்படுதலின், "பார்க்கின்ற உயிர்" என்று அருளினார். மழையாய்ப் பொழிதல் முதலிய அனைத்தும் உயிர்கட்கு இரங்கும் இரக்கத்தாலே என்றதென்க. எல்லா உயிர்கட்கும் இரங்குகின்ற அவன், தான் விரும்பி வந்து ஆட்கொண்ட எனக்கு எத்துணை இரங்குவான் என்பது சொல்ல வேண்டுமோ என்றபடி.

4. பொ-ரை: நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே, நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ! நெஞ்சு உளதன்றோ! அறிவு உளதன்றோ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ! அவற்றால் தேவர்கள், 'இயல்பாகவே பாசம்