| முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் | | தொழநின் றதிமில் ஏறுடை யானை | | அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை | | ஆரூ ரானை மறக்கலு மாமே. | | 4 |
607. | செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல் | | தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல் | | மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல் | | வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல் | | பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை | | பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை | | அறிவுண் டேஉட லத்துயி ருண்டே | | ஆரூ ரானை மறக்கலு மாமே. | | 5 |
இல்லாதவன்' என்றும், 'எங்கள் தலைவன்' என்றும் வணங்க நிற்கின்ற, முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும், யாவர்க்கும் தந்தையும், என் தந்தைக்குத் தலைவனும், எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ! கு-ரை: சிந்தையும்; மனமும் வேறுவேறாதல் அறிந்து கொள்க. 'விதி' என்றது, விதித்தவாறே செய்த புண்ணியத்தைக் குறித்தது. அதன் பயனாவது மக்கட் பிறப்பும், அதன் பயனாகிய இறையன்புமாம். சிந்தை முதலியவற்றைத் தனித்தனியே எடுத்து, 'உளதன்றோ' என வலியுறுத்தியது, அவனை நினைத்தற்குத் தடையாதும் இன்மையை இனிது விளக்கியவாறு. "எம்" என்றது, தம்போல்வாரையும் உளப்படுத்து. 5. பொ-ரை: நன்மையைத்தரும் கல்வியும், அதன்பயனாகிய உள்ளத்தெளிவும், அதன்பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற, பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை, பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ!
|