பக்கம் எண் :

928
 
609.கரியா னைஉரி கொண்டகை யானைக்

கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை

வரியா னைவருத் தம்களை வானை

மறையா னைக்குறை மாமதி சூடற்

குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்

ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்

கரியா னைஅடி யேற்கெளி யானை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7

610.வாளா நின்று தொழும்அடி யார்கள்

வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்

நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார்

நம்மையாள் கின்ற தன்மையை ஓரார்



'அவர் பற்றுவது உடலையே யாதலின், உடலைப் பொருளென்று செய்வன' என்றார். 'அள்ளற்கழனி' என்றது, நீர்வளங் குறையாதது என்றபடி.

7. பொ-ரை: கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும், இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும், அழகையுடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும், சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும், உலகத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் விளக்காய் உள்ளவனும். தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும், அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!

கு-ரை: பிறையைச் சூடியது. சார்ந்தாரைக் காக்கும் தன்மையைக் குறிப்பது ஆதலின், அத்தன்மை அவனுக்கே உளதாதல் பற்றி, "குறைமாமதி சூடற்கு உரியானை" என்று அருளினார். இதனானே, 'பிறை' என்னாது "குறைமதி" என்றருளினார். 'தக்கன் சாபத்தாற் குறைந்து வந்த மதி' என்றவாறு. எனவே, "குறைமதி" என்றது, இறந்தகால வினைத் தொகையாயிற்று.

8. பொ-ரை: யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப்