| கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன் | | கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி | | ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன் | | ஆரூ ரானை மறக்கலு மாமே. | | 8 |
611. | விடக்கை யேபெருக் கிப்பல நாளும் | | வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக் | | கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன் | | கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும் | | இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் | | சடையா னைஉமை யாளையோர் பாகத் | | தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை | | ஆரூ ரானை மறக்கலு மாமே. | | 9 |
பெற்று விடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும், சிலர், அவனை நாள்தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர். அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர். ஆயினும், யான், எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணையாவான் என்று கருதி, அவனையே உறவாகக் கொண்டு, அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன்; அன்றியும், பலரையும் அவனுக்கு ஆளாகுமாறு முன் நின்று அழைக்கின்றேன்; ஆதலின், யான் அவனை மறத்தலும் இயலுமோ! கு-ரை: "வாளா" என்றது, 'அரிதின் முயன்று செய்வனயாதுமில்லாதே" என்றபடி. முன்னர், "கேட்டு" என்றமையான், "நம்மை ஆள்கின்ற தன்மை" என்றது. காட்சியான் அறியப்படுவதனை என்க. 'பலரை' என்னும் ஐயுருபு. தொகுத்தலாயிற்று. 9. பொ-ரை: எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று, அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும், கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும், பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான், பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும், உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய, அழகிய
|