பக்கம் எண் :

930
 
612.ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட

உச்சிப் போதனை நச்சர வார்த்த

பட்டி யைப்பக லையிருள் தன்னைப்

பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்

கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்

காத லாற்கடற் சூர்தடிந் திட்ட

செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ

ஆரூ ரானை மறக்கலு மாமே.

10


தாமரைப் பொய்கைகளையுடைய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!

கு-ரை: 'ஊனைப் பெருக்கவே முயலுதல் முதலிய குற்றங்களையுடைய எனக்கு உய்தி வேறு யாதுளது' என்றவாறு, அக்குற்றங்கள் இல்லாதாரும் அவனை மறத்தல் கூடாதெனின், யான் அது செய்தல் கூடாமை சொல்ல வேண்டுமோ என்பது.

10. பொ-ரை: என்னை, வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த, நண்பகற் போது போலும் ஒளியுடையவனும், நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடையவனும், பகலாயும் இரவாயும் உள்ளவனும், தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும், கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும், தேவர்மீது வைத்த அன்பினால், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய, செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை, யான் மறத்தலும் இயலுமோ!

கு-ரை: சிறுபொழுதுகளுள் நண்பகல் பேரொளியுடையதாதல் அறிக. "ஆட்கொண்டு ஒளித்தபின் இனிது வெளிப்பட்டு நின்றமையின்", "ஒளித்திட்ட உச்சிப்போதன்" என்று அருளினார். இவ்வாறன்றி, 'இந்நிகழ்ச்சி உச்சிப்போதில் நிகழ்ந்தது' எனக் கொண்டு, 'ஒளித்திட்ட உச்சிப்போதினை உடையவனும்' என்று உரைத்தலுமாம். 'உச்சிப்போதன்' என்பதற்கு, 'தலையில் பூவையணிந்தவன்' என உரைப்பாரும் உளர். பட்டி - பட்டினை உடையவன். "பட்டு" என்றது, 'ஆடை' என்னும், அளவாய் நின்றது, வேதத்தில் வல்லவரை, 'பட்டர்' என்றல் அறிக; 'பட்டராகில் என் சாத்திரங் கேட்கில் என்' (தி. 5 ப. 99 பா. 3.) என்பது திருநாவுக்கரசர் திருமொழி.