பக்கம் எண் :

935
 
617.முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய

மூர்க்க னாகிக் கழிந்தன காலம்

சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்

சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்

அந்தி வெண்பிறை சூடும்எம் மானே

ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா

எந்தை நீஎனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

4

618.அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்

ஐவ ரும்புர வாசற ஆண்டு

கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்

கடைமு றைஉனக் கேபொறை யானேன்



4. பொ-ரை: மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே, திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே, என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன்; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன்; எனக்கு, நீ. உய்யும் நெறியை வழங்கியருளாய்.

கு-ரை: "முந்தி" என்றது, இகர ஈற்றுப் பெயர், சிந்தித்தற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன. "சிறுச்சிறிது" என்றது, 'சிறுமையையுடைய சிறிது' என நின்று, 'மிகச் சிறிது' எனப் பொருள் தந்தது.

5. பொ-ரை: திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர்; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து, 'இனி இவனாற் பயனில்லை' என்று கழித்து, என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு. முடிவில் உனக்கே நான் சுமையாயினேன்; அதன்பின்பே நான் விழிப்படைந்து, உண்மையை உணர்ந்தேன்; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதேயென்றால், இனி இதனை யான் விரும்பேன்; இதனை மிக்க இழிவுடை