| விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை | | வேண்டேன் மானுட வாழக்கைஈ தாகில் | | இழித்தெ னென்றனக் குய்வகை யருளாய் | | இடைம ருதுறை எந்தைபி ரானே. | | 5 |
619. | குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக் | | கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக் | | கற்றி லேன்கலை கள்பல ஞானங் | | கடிய வாயின கொடுமைகள் செய்தேன் | | பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் | | பாவி யேன்பல பாவங்கள் செய்தேன் | | எற்று ளேன்எனக் குய்வகை யருளாய் | | இடைம ருதுறை யெந்தைபி ரானே. | | 6 |
யதாக உணர்ந்துவிட்டேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். கு-ரை: "ஐவர்" என்றது, ஐம்பொறிகளை. புரவு - புரத்தல் அஃது அடிமைகொண்டு ஆளுதலைக் குறித்தது. 'அவ் வைவர்கள்' என எடுத்துக் கொண்டுரைக்க. "ஆசற" என்றது, 'அவர்தம் விருப்பத்திற் குறையில்லாதபடி' என்றவாறு. கழித்துக் காற்பெய்தது, உடல் தளர்ந்தமைபற்றி; "கால்" என்ற விடத்து, 'கீழ்' என்னும் பொருளுடைய கண்ணுருபு விரிக்க. "உனக்கே பொறையானேன்" என்றது, "பிறராலன்றி உன்னாலே அளிக்கத்தக்கவனாயினேன்" என்றதாம். "கடைமுறை" என்றது, முன்பே, "உனக்கு அடைக்கலமாகற்பாலேன்; அங்ஙனம் ஆகாதொழிந்தேன்' என்று இரங்கியவாறு. 'விழித்துக்கண்டனன் மெய்' என்றது, உடல் தளர்ந்தபின் நல்லறிவு எய்திற்று என்றதாம். நாயனார் தாம் அந் நிலையினரல்லராயினும், ஞானசம்பந்தரைப்போல இளமையிலே இறைவனை அடையாதொழிந்தமையை நினைந்த வருத்தத்தால் அங்ஙனம் அருளினார் என்க. 'இழித்தேன்' என்பது குறுகிநின்றது. 6. பொ-ரை: திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, யான், அழகிய, நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று, தீவினையும் நல்வினையுமாகிய இருவினைகளை மிகுதியாகச் செய்தும், மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன்;
|