620. | கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக் | | குற்றஞ் செற்ற மிவைமுத லாக | | விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும் | | வேண்டில் ஐம்புலன் என்வச மல்ல | | நடுக்க முற்றதோர் மூப்புவந் தெய்த | | நமன்த மர்நர கத்திடல் அஞ்சி | | இடுக்க ணுற்றனன் உய்வகை யருளாய் | | இடைம ருதுறை யெந்தைபி ரானே. | | 7 |
அதனால், பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயினேன்; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான், எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன்! எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய். கு-ரை: 'குற்றம், குணம்' என்பன, அவற்றைத் தரும் செயல்கள் மேல் நின்றன. மயக்கமாவது, ஐம்புல இன்பமே இன்பம் எனக் கொள்ளுதல். ஐம்புல ஆசை உளதாயவழி, அவ்வாசை அடியாக மயக்கமும், அம்மயக்கம் அடியாக இருவினைகளும், அவ்விருவினை அடியாக ஞானநூற் பொருளை உணரமாட்டாமையும், அம்மாட்டாமை அடியாக உயிர்க்கு இறுதி பயக்கும் செயல்களில் அஞ்சுதல் இன்மையும், அவ்வின்மை யடியாகத் துணையின்றி அலமருதலும் உளவாதல் ஒருதலை என்பதனை அருளியவாறு. ஐம்புல ஆசைகளுள் தலையாய மகளிராசையின் கொடுமையை விரித்தபடியாம். 'பாவங்கள் செய்தேனாய்ப் பாவியேனாகியேன்' என்றது, மேற்போந்தவாற்றா லெல்லாம் உளதான நிலையைத் தொகுத்து அருளிச்செய்ததாம். 'எற்றுக்கு' என உருபு விரிக்க. 7. பொ-ரை: திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை, உலோபமும், பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன்; ஆசையும், கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்கமாட்டேன்; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத்தால், யான் அவற்றின் வயத்தேனல்லது, அவை என் வயத்தன அல்ல; அதனால், உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய, 'மூப்பு' என்பதொன்று வந்து அடைய, அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனாயினேன்; எனக்கு, நீ, உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய்.
|