பக்கம் எண் :

938
 
621.ஐவ கைஅரை யர்அவர் ஆகி

ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்

அவர வர்வழி யொழுகிநான் வந்து

செய்வ கையறி யேன்சிவ லோகா

தீவ ணாசிவ னேஎரி யாடீ

எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

8


கு-ரை: "குற்றம்" என்றது ஏற்புழிக்கோடலால் உலோபத்தைக் குறித்தது. பகைமை, தாம் வேண்டியதனை முடியாமை பற்றி வருவது. 'காமம், வெகுளி, மயக்கம்' என்னும் மூன்றனுள், சிறப்புடைய இரண்டனை, "வேட்கையும் சினமும்" என எடுத்தோதியருளினார்.

"வேண்டில்" என்றது, 'விடவேண்டில்' என்றவாறு, "ஐம்புலன்" என்றது, அவற்றின்மேற் செல்லும் ஆசையை. "கிற்றிலேன்" எனவும், அல்ல" எனவும் அருளியன, தம் மாட்டாமையைச் சொல்லி இரந்தவாறு.

8. பொ-ரை: சிவலோகத்திற்குத் தலைவனே, நெருப்புப் போலும் நிறம் உடையவனே, சிவபெருமானே, தீயோடு நின்று ஆடுபவனே, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர். அவ்வாறு ஆவர், தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால், யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து, செய்வது இன்னது என்று அறிகின்றிலேன்; எனக்கு உய்யும் நெறியாவது எந்நெறி? அதனை வழங்கியருளாய்.

கு-ரை: "அவர் நீங்கார்" எனப் பின்னர்ப் போந்து அருளினாராயினும், "ஐவர் ஐவகை அரையராகி" என முன்னர் ஓதுதலே கருத்தாகக் கொள்க. 'ஐவர் நீங்கார்' என்றே பாடம் ஓதுதலுமாம். "அவராகி" என்றதில் அவர், பகுதிப்பொருள் விகுதி, 'வந்து ஒழுகி' எனக் கூட்டுக. "வந்து" என்றது, இடவழுவமைதி.

9. பொ-ரை: திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே, அறிவில்லாத, மானுட இன்பத்தைக் கருதி, முன்னர்ப்