பக்கம் எண் :

939
 
622.ஏழை மானுட வின்பினை நோக்கி

இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்

வாழை தான்பழுக் குந்நமக் கென்று

வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்

கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்

போத மும்பொரு ளொன்றறி யாத

ஏழை யேனுக்கோர் உய்வகை யருளாய்

இடைம ருதுறை யெந்தைபி ரானே.

9

623.அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி

ஐவ னஞ்சுமந் தார்ந்திரு பாலும்

இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்

இடைம ருதுறை எந்தைபி ரானை


பழத்தைத் தந்த வாழை, இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருதுவாரைப் போல, இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு, அதனானே, வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு, அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று, அறிவின் இயல்பையும், அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளியேனுக்கு, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.

கு-ரை: வாழை, ஒரு குலைக்குமேல் மறுகுலை ஈனாது கெடுதல் இளமை, விரையக்கெடுதற்கு உவமை என்க. வினைக்கு வஞ்சனையாவது, தோன்றாது நின்று வருத்துதல். "உள்வலை" என்றதனை 'வலையுள்' என மாற்றுக. "பக்கம்" என்றதன்பின், 'நின்று' என்பது வருவிக்க. "பொருள்" என்றவிடத்தும் எண்ணும்மை விரிக்க. 'போகமும் பொருள்' என்பது பாடமாயின், 'இன்பமும், அதனைத் தருகின்ற பொருளும்' என உரைக்க.

10. பொ-ரை: அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும், அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு, மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு, நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய, நம்பி