பக்கம் எண் :

940
 

உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை

உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்

நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி

நாதன் சேவடி நண்ணுவர் தாமே.

10

திருச்சிற்றம்பலம்


யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை, மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள், நரைத்தலும், மூத்தலும், இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர்; இது திண்ணம்.

கு-ரை: "ஊரன்" என்றது இடவழுவமைதி. நடலை - துன்பம்; அது, மிக்க துன்பமாகிய இறப்பைக் குறித்தது. 'இறத்தலின் மேலாய துன்பம் இல்லை' என்பதனை, "சாதலின் இன்னாததில்லை" என்னும் திருக்குறளாலும் உணர்க (230). 'ஆர்த்து' என்பது, பாடம் அன்று.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்
 
மன்னுமருதின் அமர்ந்தாரை

வணங்கி மதுரச் சொன்மலர்கள்

பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்

பரவிப் போந்து தொண்டருடன்

அந்நற்பதியி லிருந்தகல்வா

ரரனார் திருநா கேச்சரத்தை

முன்னிப் புக்கு வலங்கொண்டு

முதல்வர் திருத்தாள் வணங்கினார்.

65
-தி. 12 சேக்கிழார்