625. | உற்ற வர்க்குத வும்பெரு மானை | | ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் | | பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் | | பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை | | அற்ற மில்புக ழாள் உமை நங்கை | | ஆத ரித்து வழிபடப் பெற்ற | | கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் | | காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | | 2 |
தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு! கு-ரை: 'வியப்பு' என்பது சொல்லெச்சம், இவ்விடத்து, சேக்கிழார், "விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா" (தி. 12 ஏயர்கோன். புரா. 286) என்று அருளுதலின், "ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை" என்றதற்கு இதுவே, பொருளாதல் அறிக. 'சீலம்' என்பது, குணம் என்னும் பொருட்டாய், பெருமையைக் குறித்தது. திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு, 'ஏவலார் குழலி' எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. 'என்றும் வழிபட' என இயையும்; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க. கச்சி ஏகம்பம், உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க. "வழிபடப் பெற்ற" என்றது. "எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால்" (தி. 4 ப 81. பா 4) என்றதுபோல நின்றது. 'வழிபடப்பெற்ற காலகாலன்' என்றதனை, 'அந்தணர் ஆக்கொண்ட அரசன்' என்பதுபோலக் கொள்க. 2. பொ-ரை: தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.
|