626. | திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் | | செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக் | | கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் | | காம னைக்கன லாவிழித் தானை | | வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை | | மருவி ஏத்தி வழிபடப் பெற்ற | | பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் | | காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. | | 3 |
627. | குண்ட லந்திகழ் காதுடை யானைக் | | கூற்று தைத்த கொடுந்தொழி லானை | | வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை | | வாள ராமதி சேர்சடை யானைக் |
கு-ரை: "ஒன்று" என்றது தொகைக் குறிப்பு. "பற்றவன்" என்றதில் அகரம், ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை. 'பரவிக்கொண்டானை' என்பதும் பாடம். 3. பொ-ரை: வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு. கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை, "தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ"
என்ற திருவாசகத்தால் உணர்க. (தி. 8 திருச்சாழல்-15.) 4. பொ-ரை: குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும்,
|