பக்கம் எண் :

944
 

கெண்டை யந்தடங் கண்உமை நங்கை

கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற

கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

4

628.வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை

வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை

அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை

அரும றையவை அங்கம்வல் லானை

எல்லை யில்புக ழாள்உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

5


கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: "கண்டம்" என்றதில் தொக்கு நின்ற ஏழனுருபு. "உடை" என்ற, ஈறுகெட்ட பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது.

5. பொ-ரை: யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!