பக்கம் எண் :

945
 
629.திங்கள் தங்கிய சடையுடை யானைத்

தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்

சங்க வெண்குழைக் காதுடை யானைச்

சாம வேதம் பெரிதுகப் பானை

மங்கை நங்கை மலைமகள் கண்டு

மருவி ஏத்தி வழிபடப் பெற்ற

கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

6

630.விண்ண வர்தொழு தேத்தநின் றானை

வேதந் தான்விரித் தோதவல் லானை

நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை

நாளும் நாமுகக் கின்றபி ரானை

எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

7


கு-ரை: வெண்மை, கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி, நன்மையுடைமை பற்றியே, இறைவன், 'சிவன்' எனப்படுதல் அறிந்து கொள்க.

6. பொ-ரை: பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திருவேகம்பத்தில், இறைவி, இறைவனது இலிங்கத் திருவுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை, திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க. இனி, கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம் கூறும். அதன் வழி நின்று, "கண்டு" என்றதற்கு, 'ஆக்கி' என்று உரைப்பினும் ஆம்.

7. பொ-ரை: தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்,