பக்கம் எண் :

947
 
632.வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்

வாலி யபுர மூன்றெரித் தானை

நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி

நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்

பரந்த தொல்புக ழாள்உமை நங்கை

பரவி ஏத்தி வழிபடப் பெற்ற

கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

9

633.எள்கல் இன்றி இமையவர் கோனை

ஈச னைவழி பாடுசெய் வாள்போல்

உள்ளத் துள்கி உகந்துமை நங்கை

வழிபடச் சென்று நின்றவா கண்டு

வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி

வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட

கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக்

காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

10


9. பொ-ரை: தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார். "நிரந்தரம்" என்றது, 'மாறாத அழிவு' என்றதாம். "நிர்க்கண்டகம்" மாறாதவன்கண்மை. 'நிர்' என்னும் வடமொழி இடைச்சொல், இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக.

10. பொ-ரை: தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை