பக்கம் எண் :

951
 
636.அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்

ஆய நம்பனை வேய்புரை தோளி

தங்கு மாதிரு வுருவுடை யானைத்

தழல்ம திசடை மேற்புனைந் தானை

வெங்கண் ஆனையின் ஈருரி யானை

விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்

கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

2

637பாட்ட கத்திசை யாகிநின் றானைப்

பத்தர் சித்தம் பரிவினி யானை

நாட்டகத் தேவர் செய்கையு ளானை

நட்டம் ஆடியை நம்பெரு மானைக்


கருத்துடையது. வணங்குகின்றவவர், மேலும் விடாது பற்றி நிற்றல், அவனது இன்ப நுகர்வினாலாம். 'துணையை' என்னும் ஐயுருபு, தொகுத்தலாயிற்று. முற்றல் - முதிர்தல்; அது, செருக்கு மிகுதலைக் குறித்தல், வழக்கினுள்ளுங் கண்டுகொள்க. 'வெளிப்பட' என்பது, 'கண்டுகொண்டேன்' என வலியுறுத்தோதியதனால் பெறப்பட்டது. ஏகாரம், தேற்றம்.

2. பொ-ரை: துணை நூல்களாகிய ஆறும், முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும், மூங்கில் போலும் தோள்களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள, சிறந்த திருமேனியையுடையவனும், ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும், சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலையுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், விண்ணில் உள்ளவர்களும், மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற, தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்காவினில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.

கு-ரை: "தழல் மதி" வினைத்தொகை. தழலுதல் - ஒளிர்தல். "குரா" என்பது, செய்யுளாகலின், குறியதன்கீழ் ஆகாரம் குறுகிற்று.

3. பொ-ரை: பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும், அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும், மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும், நடனம் ஆடு