| காட்ட கத்துறு புலியுரி யானைக் | | கண்ணொர் மூன்றுடை அண்ணலை அடியேன் | | கோட்ட கப்புன லார்செழுங் கழனிக் | | கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | | 3 |
638. | ஆத்த மென்றெனை ஆள்உகந் தானை | | அமரர் நாதனைக் குமரனைப் பயந்த | | வார்த்த யங்கிய முலைமட மானை | | வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த | | தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் | | தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங் | | கூத்த னைக்குரு மாமணி தன்னைக் | | கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | | 4 |
பவனும், நமக்குத் தலைவனும், காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும், கண்கள் மூன்று உடைய பெருமையுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன். கு-ரை: "இசையாகி" என்னும் ஆக்கம், உவமை குறித்து நின்றது. 'சித்தம் பரிதலுக்கு இனியானை' என்க. 'பூசுரா' என்னும் பெயர்பற்றி, "நாட்டகத் தேவர்" என்று அருளினார். "நம்பெருமான்" எனத் தம்மைப் பன்மையாற்குறித்தது. அவனுக்கு ஆளாகிநின்ற சிறப்புப்பற்றி. 4. பொ-ரை: என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்குவாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளினவனும், தேவர்கட்குத் தலைவனும், முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து, வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும், மங்கலம் உடையவனும், செழுமையான தேன்போல இனிப்பவனும், தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும், ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன். கு-ரை: 'திருக்கயிலையில் அருளிச்செய்தபடி தடுத்தாட்
|