639. | அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் | | ஆள தாகஎன் றாவணங் காட்டி | | நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த | | நித்தி லத்திரள் தொத்தினை முத்திக் | | கொன்றி னான்றனை உம்பர்பி ரானை | | உயரும் வல்லர ணங்கெடச் சீறுங் | | குன்ற வில்லியை மெல்லிய லுடனே | | கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | | 5 |
640. | காற்றுத் தீப்புன லாகிநின் றானைக் | | கடவு ளைக்கொடு மால்விடை யானை | | நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை | | நிரம்பு பல்கலை யின்பொரு ளாலே |
கொள்ளுதலே, தான், வாய்மையை யுடையவன் என்பதற்கு இயைவதாம் என்று வந்து ஆண்டானன்றி, என் தகுதி பற்றி வந்து ஆண்டிலன்' என்றபடி. "குமரனைப் பயந்த" என்றது இறைவிக்கு அடையாயும், இறைவனுக்கு அடையாயும் இயையும் இருநிலைமையும் உடையது என்க. தில்லையம்பலத்துள் நிறைதலாவது, அவ்விடம் பொலிவுபெற நிற்றல். 5. பொ-ரை: அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து, அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும், நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க' என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று, பின்பு, திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த, முத்தினது திரட்சியமைந்த கொத்துப் போல்பவனும், முத்தியளித்தற்குப் பொருந்தியவனும், தேவர்கட்குத் தலைவனும், உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த, மலைவில்லை உடையவனும் ஆகிய இறைவனை, இறைவியுடனே, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன். கு-ரை: 'ஆள்' என்பது, சொல்லால் அஃறிணையாயும் நிற்குமாதலின், 'அது' என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றது. "முத்திக்கு ஒன்றினான்" என்றது, 'முத்தியை யளிப்பவன் அவன் ஒருவனே' என்றவாறு. 6. பொ-ரை: காற்றும், தீயும், நீரும் ஆகி நிற்பவனும், எல்லாப் பொருள்களையும் கடந்தவனும், கொடிய பெரிய இடப ஊர்தியை
|