| போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் | | போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற் | | கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக் | | கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | | 6 |
641. | அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் | | டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத் | | துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த | | சோதி யைச்சுடர் போல்ஒளி யானை | | மின்ற யங்கிய இடைமட மங்கை | | மேவும் ஈசனை வாசமா முடிமேற் | | கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார் | | கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. | | 7 |
யுடையவனும், நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும், நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த, ஒலிக்கின்ற கழலை யணிந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன். கு-ரை: இடைநின்ற பூதங்களை அருளவே, முதலிலும் இறுதியிலும் உள்ள, 'வான், நிலம்' என்னும் பூதங்களும் கொள்ளப்படும். "காற்றுத் தீப் புனல்", உம்மைத்தொகை. 'கொல்லேறு' என்றல் மரபாதல் பற்றி, 'கொடுவிடை' என்று அருளினார். "நீற்றுத் தீ" என்றது, தீயினது தன்மையை விதந்தவாறு. "தொழும் அவன்" என்றது மார்க் கண்டேயரை. கூற்றுவனை உதைத்த காரணத்தை எடுத்தோதுகின்றாராதலின், 'தொழும் அவன் உயிரைப் போக்குவான் உயிர்நீக்கிட' என, வேயொருவன்போல அருளினார். 'நீங்கிட' என்பதும் பாடம். 'குரை கழல்' என்றது, உதைத்த திருவடியின் சிறப்பை அருளியபடி. 7. பொ-ரை: அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப்படுத்தியவனும், நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடியில் சிலம்பையணிந்த ஒளிவவடிவினனும், விளக்குப்போலும் விளக்கம் உடையவனும், மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும், மணங்கமழுமாறு தலையின் மேல்
|