பக்கம் எண் :

955
 
642.நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்

ஞான சம்பந்த னுக்குல கவர்முன்

தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்

தன்மை யாளனை என்மனக் கருத்தை

ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்

அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்

கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

8



கொன்றை மாலையையணிந்த, அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை, அடியேன், அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.

கு-ரை: "பலி" என்றது, இங்குத் திருமால் முதலிய தேவரிடத்துக் கொண்ட இரத்த பிச்சையை. அயன் சிரத்தை அரிந்ததும், அதில் இரத்த பிச்சை ஏற்றதும் தேவர்களது செருக்கை நீக்கித் தெளிவைத் தருதற்பொருட்டுச் செய்தனவாதலின், 'அயன்றன் சிரம் அரிந்து அதிற் பலிகொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை' என்று அருளினார். "துன்று பைங்கழல்" என்றது அடையடுத்த ஆகு பெயர். ஒரு காலில் கழலை அணிந்து மற்றொரு காலில் சிலம்பை அணிந்தமையின், இவ்வாறு அருளிச்செய்தார். சுடர்போல் ஒளியாதலாவது, எப்பொருளையும் விளக்கி நிற்றல். 'மங்கை மேவும்' என்றதனை, 'மங்கையால் மேவப்படும், மங்கையை மேவும்' என இருவகையாகவுங் கொள்க. "வாசம் ஆக" என்னும் எச்சம், "கொன்றை" என்றதன்பின் உருபோடு தொக்குநின்ற 'அணிந்த' என்பதனோடு முடிந்தது.

8. பொ-ரை: எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு, அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி, பலரு காணத் தாளம் ஈந்த கருணையாளனும், என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும், தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல்களைப்பாட, அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும், பதினெண் கணங்களாலும் வணங்கப்படுபவனும், திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.