பக்கம் எண் :

956
 
643.அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்

கன்றி ரங்கிய வென்றியி னானைப்

பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்

பரவி யும்பணி தற்கரி யானைச்

சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம்

ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்

குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

9



கு-ரை: "ஈந்து இரங்கும் தன்மையாளனை" என்றாரேனும், 'இரங்கி ஈயும் தன்மையாளனை' என்றலே திருவுள்ளம் என்பதனை,

"திருஞான சம்பந்தர் திருக்கைக ளால்ஒற்றிப்
பெருகார்வத் துடன்பாடப் பிஞ்ஞகனார் கண்டிரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருண்மாலைத் திருப்பதிகம் பாடியேபோற்றிசைத்தார்"

(தி. 12 ஏ. கோ. புரா. 154)

என, இதன் பொருளைச் சேக்கிழார் விளக்கியருளியவாற்றால் உணர்க. பதினெண்கணத்தை, "எண்கணம்" என்றது, முதற்குறை. "இறைஞ்சும்" என்றதற்கு, கருத்துப்பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஞானசம்பந்தர் பாடலுக்கு இரங்கினமையை நினைந்தவர், தம் பாடலுக்கும் இரங்கி, ஆளும் பூதங்களை ஆளாக ஈந்து, குண்டை யூரிற்பெற்ற நெல்மலையைத் திருவாரூரில் அட்டித்தரப் பணித் தமையையும் நினைந்து, 'கோளிலிப்பெருங் கோயிலுளானை' என்று அருளினார்போலும்! திருகோலக்கா, திருஞானசம்பந்தருக்குத் திருத்தாளம் அளித்த தலமும், திருக்கோளிலி, நாயனாருக்கு நெல்லிட ஆட்கள் அளித்த தலமும் ஆதல் அறிந்துகொள்க.

9. பொ-ரை: அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து, பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும், விரிந்த உலகத்தைப் படைத்தும், உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும், தலையில் அமைந்து, 'கண், வாய், காது, மூக்கு' என்பவற்றோடு, நீண்ட உடம்புமாய் நின்று, தீமையைத் தரும் வினையை ஒழித்த எம் பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன்,சோலைகளில் குரங்குக்