பக்கம் எண் :

957
 

கூட்டம் குதித்துத் திரிகின்ற, வயல் சூழ்ந்த, திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.

கு-ரை: உலகத்தை அளித்தவன் (படைத்தவன்) பிரமன்; உண்டவன், திருமால். 'உகத்தல்', ஈண்டு, களித்தல். "அளித்து, உண்டு" என்ற சிறப்புச் செய்தென் எச்சங்கள், "உகந்தவர்" என்ற பொது வினைப்பெயரோடு முடிந்தன. 'இவளும் இவனும், சிற்றில் இழைத்தும் சிறுபறையறைந்தும் விளையாடுப' என்றல்போல; எனவே, "அளித்து" என்னும் எச்சம், எண்ணின்கண் வந்ததாம். "காயம்" என்றது, மெய் என்னும் பொறியை, ஐம்பொறிகளை எடுத்தோதவே, ஏனைய கருவிகள் எல்லாம் தழுவப்படும். இறைவன், தன்னால் ஆகொள்ளப்பட்டவர்களது கருவி கரணங்களைத் தன் கருவி கரணங்களாகவே கொண்டு, அவற்றைத் தன் வழியே செலுத்தி நிற்றலின், 'கண் முதலிய கருவிகளாகி' என்றும், அதனால், அவன் அடியார்க்கு நுகர்வினையான் வரும் உள்ளத்திரிபும், அத்திரிபு காரணமாகக் கிளைக்கும் புதுவினையும் இலவாமாகலின், "தீவினை தீர்த்த எம்மானை" என்றும் அருளிச் செய்தார். "நற்பதத்தார் நற்பதமே" என்று எடுத்துக்கொண்டு,

"சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற

சொலற்கரிய சூழலாய் இதுஉன் தன்மை

நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்

நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற

கற்பகமே"

(தி. 6 ப. 95 பா. 4)

"............................... கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி"

(தி. 8 திருவா-திருவண்-171-173)

"எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்யான்இதற் கிலனொர்கைம் மாறே"

(கோயில்திருப்-10)

என்றாற்போல, ஆரா அன்பால் அருளிப்போந்த அருட்டிருமொழிகள் பலவும் இப்பொருளை வெளியிடுவனவேயாம். "தீவினை" என்றதனை, இங்கு, இயைபின்மை நீக்கிய விசேடணம் பெற்றதாகக் கொள்க.