பக்கம் எண் :

960
 
646.திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்

சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்

அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்

அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்

தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி

தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்

எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி

எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

2



கு-ரை: 'நம்பி' என்பது ஆடவருட் சிறந்தவனுக்கு உரிய பெயர்; அது, சிலவிடத்து, 'தலைவன்' என்னும் பொருளையும் தரும். அவ்வாறு இத்திருப்பதிகத்துள் வருவனவற்றை அறிந்துகொள்க. "நம்பி" என்றன பலவற்றுள்ளும் இறுதியில் உள்ள ஒன்றை யொழித்து, ஏனைய வெல்லாம், இயல்பு விளிகளாய் நின்றன. 'நம்பீ என்ற திருப்பதிகம்' என்ற பாடமும் காணப்படுதலால், அவைகளை, 'நம்பீ' என்றே பாடம் ஓதினும் இழுக்காது.

இவ்வாறன்றி, அவைகளை விளியல்லாத பெயர்களாகக் கொள்ளுதல் கூடாமை ஓர்ந்துணர்க. "மெய்யை" என்றதில் ஐ சாரியை. உருபாகக் கொண்டு, 'மேனியை மறைக்குமாறு' என்று உரைத்தலுமாம். 'பூசிய, ஓதிய, ஏந்திய' என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. "கண்ணும்" என்ற உம்மை, அசைநிலை. 'மூன்றும் உடையான்' என்பதும் பாடம்.

'உடையாரொரு நம்பி' என்பது, பாடம் அன்று. சிறுமை, புன்மை மேற்று. செறுதல் - பகைத்தல்; அஃது அதனாற் செய்யப்படும் செயலைக் குறித்தது. 'நீயே' என்னும் பிரிநிலை ஏகாதத்தொடு கூடிய எழுவாய், எஞ்சி நின்றது. 'எல்லாப் பிறப்பும்' ஏழாய் அடங்குதலின், "எழுபிறப்பும்" என்று அருளினார். "எங்கள்" என்றது, தம்போலும் அடியார் பலரையும் உளப்படுத்து. நம்பியை, தலைவனை என்றாற் போல முன்னிலைக்கண் அவ்விகுதி பெற்றுவருதல் பிற்காலத்து அருகி, அஃது எஞ்சி நிற்றலே பெரும்பான்மையாயிற்று. "கண்டாய்" என்றது, முன்னிலை யசை.

2. பொ-ரை: திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே, அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே, பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும்