648. | ஊறுநம்பிஅமுதாஉயிர்க்கெல்லாம் | | உரியநம்பிதெரியம்மறைஅங்கம் | | கூறுநம்பிமுனிவர்க்கருங்கூற்றைக் | | குமைத்தநம்பிகுமையாப்புலன்ஐந்தும் | | சீறுநம்பிதிருவெள்ளடைநம்பி | | செங்கண்வெள்ளைச்செழுங்கோட்டெருதென்றும் | | ஏறுநம்பிஎன்னைஆளுடைநம்பி | | எழுபிறப்பும்எங்கள்நம்பிகண்டாயே. | | 4 |
649. | குற்றநம்பிகுறுகாரெயில்மூன்றைக் | | குலைத்தநம்பிசிலையாவரைகையில் | | பற்றுநம்பிபரமானந்தவெள்ளம் | | பணிக்கும்நம்பியெனப்பாடுதலல்லால் | | மற்றுநம்பிஉனக்கென்செயவல்லேன் | | மதியிலியேன்படுவெந்துயரெல்லாம் | | எற்றுநம்பிஎன்னைஆளுடைநம்பி | | எழுபிறப்பும்எங்கள்நம்பிகண்டாயே. | | 5 |
4.பொ-ரை:உள்ளத்தில், அமுதம் போல ஊற்றெழுகின்ற நம்பியே, எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே, முனிவர்கட்கு, வேதத்தையும், அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே, அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே, அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே, திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே, சிவந்த கண்களையும், செழுமையான கொம்புகளையும் உடைய, வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். கு-ரை: "குமையாப்புலன்" என்றதில் குமைத்தல், அடக்குதல். "வெள்ளடை" என்றது, திருக்குருக்காவூர்க்கோயிலின் பெயர். 5.பொ-ரை:அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, உன்னை, 'மலையை வில்லாக வளைத்த நம்பியே, பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே, பின்பு அதனால்
|