பக்கம் எண் :

964
 
651.பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்

பிரமனும் என்றிவர் நாடியுங் காணா

உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே

உலகுநம் பிஉரை செய்யும தல்லால்

முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி

முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட

தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி

எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

7

 

652.சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி

தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி

வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய

வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்



7. பொ-ரை: 'நப்பின்னை' என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும், பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே, உலகிற்கு ஒருவனாய நம்பியே, உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி, அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே, பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே, உன் இயல்பெல்லாம் இவை போல்பவனே; ஆயினும், இத்தனையையும் தோன்றாவாறு அடக்கி, பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ? எமக்குப் பெருமானாகிய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன்.

கு-ரை: 'காணா நம்பி' என இயைக்க, "உலகு நம்பி" என்றது, 'உலகிற்கு ஒரு நம்பி என்றதன் தொகை. 'ஆஃதல்லால்' என்னும் ஆய்தம், இசையின்பம் நோக்கித் தொகுக்கப்பட்டது, "இவை என்றது, 'இத்தன்மையன' என்னும் பொருளது. "என்னை" என்றது, வினா வினைக்குறிப்பு.

8. பொ-ரை: சொற்களாய் நிற்கும் நம்பியே, அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே, எப்பொருளின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே, அடியார்க்கு அருள்செய்ய