பக்கம் எண் :

965
 

அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி

அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற

இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி

எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

8

 

653.காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்

கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை

ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர

அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்



வல்லையாகிய நம்பியே, உனக்கு ஆட்செய்ய மாட்டாதார், உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ? பதினெண் கணங்களும் போற்ற, உமையை ஒருபாகத்தில் வைத்திருந்தும், இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி. நம்பீ, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

கு-ரை: "சொல்லை" என்ற ஐகாரம், சாரியை. 'தோற்றம் ஈறுகட்கு' என உருபு விரிக்க. 'உனக்கு ஆட்படாதவர் வருந்துதற்குக் காரணம் அவர்களது வினை' என்பது திருக்குறிப்பு. அடுக்கிநின்ற விளிகள் இரண்டனுள் முன்னது வியப்புப் பற்றியும், பின்னது வேண்டிக்கோடல் பற்றியும் வந்தன. வியப்பு, அடியார்களை வினை தாக்காதொழிதல் பற்றி எழுந்ததென்க. 'வைத்தும்' என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. அஃது அவள் எல்லா அறங்களையும் வளர்ப்பவளாதலைக் குறித்தது.


"தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்யவைத்தகாரி ரும்பொழிற் கச்சிமூதூர்க் காமக் கோட்டம்[உண்டாகநீர்போயஊரி டும்பிச்சை கொள்வ தென்னே"

என்று அருளிச்செய்தல் காண்க. (தி. 7 ப. 5 பா. 6)

9. பொ-ரை: நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உயிரோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை, நீ ஆட்கொண்டு அவர் விரைந்து