பக்கம் எண் :

966
 

தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்

திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி

ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி

எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

9

 

654.கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்

கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்

பெருக்குநம் பிபெரு கக்குருத்தா * * * 

10


திருச்சிற்றம்பலம்


உயர்கதி  அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பி, ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில், 'கங்கை' என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ, சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று, எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே, தேவர்கள் வணங்குகின்ற நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

கு-ரை: "என்றும்" என்ற உம்மை சிறப்பு. உம்மை இன்றியே ஓதுதலுமாம். 'நம்பி நம்பி' என்னும் அடுக்குக்கள், வேண்டிக் கோடலின்கண் வந்தன. "பிறை பாம்பைத் தீண்டும்" என்றது, அஃது அச்சம் இன்றி வாழ்தலைக் குறித்தது. 'கண்ணி தங்க' என்றும், 'திருந்து நம்பி' என்றும் பாடங்கள் உள்ளன. 'சமணுக்குப் பொய்ப் பொருளாகி' என்க. "ஈண்டு நம்பி" வினைத்தொகை. அதன்முன், 'எங்கட்கு' என்பது வருவிக்கப்பட்டது.

10. பொ-ரை: உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக் கொள்கின்ற நம்பியே, அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும், வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே, .........................

கு-ரை: 'கரத்தி நம்பி' என்பதும் பாடம். இத்திருப்பதிகத்துள், இதற்குப் பின்னுள்ளவற்றை நாம் பெற்றிலேம். இத்திருப்பாட்டின் பின்னுள்ள அடிகள் மறைந்துபோயின.