பக்கம் எண் :

967
 

64. திருத்தினைநகர்

பதிக வரலாறு:

சுந்தரர், திருவதிகைவீரட்டானம், திருமாணிகுழி இவற்றை வணங்கி, திருத்தினைநகர் சென்று, தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 தடுத். புரா. 91)

குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானைச் சென்று அடையுமாறு நெஞ்சிற்கு அறிவுறுத்தலாக அருளிச்செய்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 64

திருச்சிற்றம்பலம்

655.நீறு தாங்கிய திருநுத லானை

நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை

கூறு தாங்கிய கொள்கையி னானைக்

குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்

ஆறு தாங்கிய அழகனை அமரர்க்

கரிய சோதியை வரிவரால் உகளும்

சேறு தாங்கிய திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

1



1. பொ-ரை: மனமே, நீ, திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும், அந்நெற்றியில் ஒரு கண்ணை உடையவனும், வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும், குற்றம் சிறிதும் இல்லாதவனும், கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும், தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய, வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற, சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக.

கு-ரை: "தாங்கிய" என்றன பலவற்றுள் "ஆறுதாங்கிய" என்றது ஒன்றொழித்து, ஏனைய, பான்மை வழக்கால் வந்தன. கொள்கை - கருத்து; விருப்பம் அஃது அதன் காரியமாகிய செயலைக் குறித்தது. சிவம் - மங்கலம்; நன்மை. அமங்கலமாகிய தீமைக்கு யாதும்