657. | வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால் | | மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி | | முடியு மாகரு தேல்எரு தேறும் | | மூர்த்தி யைமுத லாயபி ரானை | | அடிகள் என்றடி யார்தொழு தேத்தும் | | அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச் | | செடிகொள் கான்மலி திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 3 |
658. | பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற் | | பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக் | | காவ வென்றுழந் தயர்ந்துவி ழாதே | | அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி |
3. பொ-ரை: மனமே, நீ, மாவடுப்போலும் கண்ணிணைகளையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி, அம்மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல, வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதி; மற்று, எருதில் ஏறுகின்ற மூர்த்தியும், எப்பொருட்கும் முதலாகிய பெருமானும், அடியார்கள், 'எம் அடிகள்' என்று வணங்கித் துதிக்கும் அப்பனும், இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய, புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக. கு-ரை: 'அடைந்தால், என்றும் கேடின்றி வாழ்வாய்' என்றபடி. "மடந்தையர்" எனப் பன்மையாக அருளினமையால், அது, மனைக் கிழத்தியல்லாத காமக் கிழத்தியரும் பரத்தையரும் ஆகிய பலரைக் குறித்தது. ஆகவே, 'வஞ்சனை' என்றது, தன் எண்ணங்களை இற்கிழித்திக்கு மறைத்தலும், அவர் ஒவ்வொருவரோடும் அவரிடத்தன்றிப் பிறர் மாட்டு அன்பில்லையாகக் காட்டுதல் முதலியவற்றால் அவரை அடைய முயலுதலும் போல்வனவற்றையாம். அபரஞான பரஞானங்களே அம்மையின் தனங்களாதலின், அவை ஒப்பிலவாதல் அறிக. 4. பொ-ரை: மனமே, நீ, அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினைகளையே செய்தும், பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து,
|