| மாவின் ஈருரி உடைபுனைந் தானை | | மணியை மைந்தனை வானவர்க் கமுதைத் | | தேவ தேவனைத் திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 4 |
659. | ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட் | | டுடல் தளர்ந்தரு மாநிதி யியற்றி | | என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் | | இதுவும் பொய்யென வேநினை உளமே | | குன்று லாவிய புயமுடை யானைக் | | கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர் | | சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 5 |
உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதி; மற்று, உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை, நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து, புலியினது உரித்த தோலை உடுத்தவனும், மாணிக்கம் போல்பவனும், யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும், தேவர்களுக்கு அமுதம் போல்பவனும், அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக. கு-ரை: "பாவமே புரிந்து" எனவும், "அலமந்து" எனவும் முன்னும் பின்னும் உள்ள சொற்குறிப்புக்களால், பகரப்படுவன, பொய்களேயாயின. "ஆவ" என்றது, அன்பெறா அகர ஈற்று வினைப்பெயர். முதற்கண் பொதுப்பட அருளுகின்றாராதலின், "அண்ணல் தன்திறம்" என, வேறொருவன் போல அருளிச்செய்தார். 'அறிவினால்' என்றது, கேட்டலையும், 'கருதி' என்றது சிந்தித்தலையும், 'சென்று' என்றது தெளிதலையும், 'அடை' என்றது அழுந்துதலையும் உணர்த்தி நின்றவாறு அறிந்துகொள்க. 5. பொ-ரை: உளமே, ஒரு பொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து, அந் நினைவின் வழியே, 'மெய் வருந்த, அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும்' என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை; மனமே, மலைபோலும் தோள்களை
|