660. | வேந்த ராய்உல காண்டறம் புரிந்து | | வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத் | | தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடும்இப் | | பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே | | பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப் | | பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட | | சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 6 |
உடையவனும், பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக. கு-ரை: "தளர்ந்து" என்றதனை, 'தளர' எனத் திரித்து, அதனை, "இயற்றி" என்றதனோடு முடிக்க. விரும்பிய அளவில் நிதியினை ஈட்டினோரும், என்றும் வாழ்வோரும் இலராகலின், அவர்தம் சொற்கள் பொய்யாய் ஒழிதலை, 'உளமே' என விளித்து அறிவுறுத்தி, பின், இரந்து வேண்டுவார், மறித்தும், "மனனே" என்று விளித்தார் என்க. குவலயத்தோர் எல்லாம் பலகாலும் சென்று சென்று மகிழ்ந்து தங்குதல், அதன் வளப்பத்தால் என்க. 6. பொ-ரை: மக்கள், அரசராய் நின்று உலகத்தை ஆண்டு, செங்கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை, இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று, பின்பு விட்டு நீங்கி, கொடிய துன்பத்தை நுகர்கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை, மனமே, சிறிதும் விரும்பாது விடு; மற்று, மனமே, பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும், யாவர்க்கும் மேலானவனும், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய, திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக. கு-ரை: வேந்தராதல் முதலியவற்றிற்கு உரிய எழுவாய் எஞ்சி நின்றது. 'இவ்வுடல்' என்ற சுட்டு, மக்கட் பிறப்பினைச் சுட்டி நின்றது. 'இது தன்னை இறந்து' என இயையும். இறத்தல் - கடத்தல்; நீங்குதல். தேய்தலுக்கு வினைமுதல் வருவிக்க. வெந்துயர், நரகமும் பிற
|