ஒருவிளக்கம்: மேற்காட்டியவற்றுள், வெண்ணீறு எனுந்தலைப்பில் அகத்தியரும், இருள்மலநிலை, அருளதுநிலை, அருளுருநிலை, அஞ்செழுத்தருள்நிலை எனுந்தலைப்புக்களில் உமாபதிதேவ நாயனாரும் சுந்தரர் செந்தமிழை எடுத்துக்கொள்ளாமை தெளிவு. ஒருவேளை அச்சான்றோர்களால், அவையும் தொகுக்கப் பெற்றிருந்து பின்னர் விடப் பெற்றனவோ, அன்றி அவர்களால் முன்னரே விடப்பெற்றனவோ அறியுமாறு இல்லை. எனினும் இந்த ஐந்து நிலைகட்கும் சுந்தர் செந்தமிழில் நுதல்பொருள் பல காணலாம். பிறிதொன்று இங்குச் சிந்தித்தல் வேண்டும். அகத்தியனார் பதிகங்களாகத் தொகுக்க, உமாபதி தேவநாயனார் பாடல்களாகத் தொகுத்துள்ளார். இவ்விரண்டு பொருளாராய்ச்சித் தொகுப்புக்களில் எது முன்னது, எது பின்னது என்று ஒப்பிட்டுக் காலவரையறைப் படுத்தற்கு உற்ற சான்று எதுவும் இல்லை. ஆயின் ஒன்று உறுதி. அகத்தியர் என்ற திருப்பெயருடன் தமிழகத்தே வாழ்ந்த பழஞ்சான்றோர் பலருள், இவரும் ஒருவரே என்பது அது. பதினோராந் திருமுறையிற் காணப்பெறும் கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், நக்கீரதேவ நாயனார் போல இவ்வகத்தியனாரும் சுந்தரர் காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்திருத்தல் வேண்டுமென்று கருதலாம். இனி உமாபதி தேவ நாயனாருடையதே இத்திருமுறைத் திரட்டு என்றற்கு 'ஞானதீக்கை'த் திருவிருத்தம் ஒன்று சான்றாக நிற்கின்றது; அது பின்வருவது: | தேசுமிகும் அருட்பயின்ற சிவப்பிரகாசத்தில் | திருத்துபொதுச் சங்கற்ப நிராகரணம் திருத்தி | | ஆசிலருள் வினாவெண்பாச் சார்புநூலால் | அருள்எளிதிற் குறிகூட அளித்து ஞானப் | | பூசைதக்க காரணமுன் புகன்றதனிற் புரிந்து | புணர்விக்கச் சிவஞான போதசித்தி வழிநூல் | | மாசில்சத மணிக்கோவை முன்னூல் சான்று | மருவுதிரு முறைத்திரட்டு வைத்தனன் மன்னுயிர்க்கே. | -ஞானதீக்கைத் திருவிருத்தம் |
குருவருள்: சைவசித்தாந்தத்தில், குருவருள் விளக்கம் பெரிதும்
|