பக்கம் எண் :

973
 
662.பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்

பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்

பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்

பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து

கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்

கால காலனைக் கடவுளை விரும்பிச்

செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்

சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.

8



"திசைக்குமிக் குலவு கீர்த்தித் தில்லைக்கூத் துகந்து தீய
நசிக்கவெண் ணீற தாடும் நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்க ளோதும் ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடே"

(தி. 9 திருவிசைப்பா 4-5)

எனவும்,

"ஆதிமறை ஓதி அதன்பயன்ஒன் றும்மறியா
வேதியர்சொல் மெய்யென்று மேவாதே"

- நெஞ்சுவிடுதூது 116-117

எனவும் வந்தனவற்றால் அறிந்துகொள்க. இவர் சிவபிரானுக்குரிய சடைமுடி முதலிய கோலத்தை அணிதலாற் பயன் பெறாமை அறிக. 'இங்ஙனம் வேடமாத்திரத்தால் பெரியையாகக் காட்டுதலை ஒழிக' என்பார், 'அதுநிற்க' என்று அருளினார். "முன்னெலாம்" என்றதன் பின், 'ஆய' என்பது வருவிக்க. 'முழுமுதல் என்று அடை' என இயையும்.

8. பொ-ரை: மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணை யாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும்; இது நிச்சயம். இதனை நீ அறிந்துளை என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம் மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களையுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும், காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய, செருந்தி மரங்கள் பொன்போலும்