663. | நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன் | | நன்மை யொன்றிலாத் தேரர்புன் சமணாம் | | சமய மாகிய தவத்தினார் அவத்தத் | | தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் | | உமையொர் கூறனை ஏறுகந் தானை | | உம்ப ராதியை எம்பெரு மானைச் | | சிமய மார்பொழில் திருத்தினை நகருட் | | சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. | | 9 |
மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி, அணுகச் சென்று அடைவாயாக. கு-ரை: "துணை" என்றது, நண்பர் முதலாயினாரை, "கண்டு அழுதெழ" என்றது, 'அவர் செய்யலாவது அத்துணையே; பிறிதில்லை' என்றவாறு. "கால காலன்" என்றது, 'அவனாயின் அந்நிலையை விலக்க வல்லான்' என்றதாம். 9. பொ-ரை: மனமே, நீ நன்மையை அடையவிரும்பினால், நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி; நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே, உமையை ஒரு பாகத்தில் உடையவனும், எருதை விரும்பி ஏறுபவனும், தேவர்கட்கு முதல்வனும், எங்கட்குத் தலைவனும் ஆகிய, மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, அணுகச் சென்று அடைவாயாக. கு-ரை: 'இகழ்ந்துரைப்பதன்முன் சென்று அடை' எனவும், 'நன்மையை வேண்டில் விட்டொழி' எனவும் இயையும். 'புன்மை' என்பதன் மை ஈறு தொகுத்தலாயிற்று. அப்பெயர், அத்தன்மையையுடைய சமயத்தைக் குறித்தது. 'தேரர் புன்மையும் சமணுமாம் சமயம்' என்க. நன்மையொன் றில்லாமையை, அவ்விரண்டற்குங் கொள்க. மலைச்சிகரம், சோலைக்கு, உயர்ச்சிபற்றி உவமையாயிற்று.
|