பக்கம் எண் :

983
 

வேதஞ் செய்தவர் எய்திய இன்பம்

யானுங் கேட்டுநின் இணையடி யடைந்தேன்

நீதி வேதியர் நிறைபுக ழுலகில்

நிலவு தென்றிரு நின்றியூ ரானே.

6



நின்றியூரில் உள்ள இறைவனே, கேள்வியால் துளைக்கப்பட்ட செவியினையுடைய நால்வர் முனிவர்கள், 'கின்னரர், புலி, கடிக்கும் இயல்புடைய பாம்பு, பற்றுதற்கு அரிய சிங்கம், குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம்' என்ற இவருடன் இருந்து கேட்ப, நீ, அழகிய ஆல் நிழலில் இருந்து, அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல, அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து, அடியேனும், உனது திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: பொத்து - துளை. "காது பொத்தர்" என்றதனை, 'பொத்துக் காதர்' என மாற்றி, ஐயுருபை, குவ்வுருபாகத் திரித்துக் கொள்க. 'காது பொத்தர்க்கு, அவர் குழுவுடன் கேட்பப் பகர' என்க. கின்னரர், மாதவர் முதலிய நல்லோரும், புலி முதலிய கொடிய உயிர்களும் சூழ இருப்ப என்றது, இறைவனது திருமுன்பின் பெருமையுணர்த்தியவாறு. இடத்தது நன்மையால், கொடியனவும் அக்கொடுமை நீங்கின என்றபடி. காது பொத்தர் நால்வர் என்பது, ஐதிகத் தான் நன்கறியப்பட்டது. 'காது பொத்தர் பிறவற்றைக் கேளாது காதைப் பொத்திக் கொண்டவர்' என்றும் உரைப்பர். கின்னரர் முதலிய பலரும் சூழ்ந்திருந்தாராயினும் கேட்டோர் அந் நால்வரே யாகலின், 'குழுவுடன்' என்ற மூன்றனுருபு, "தொடியொடு தொல்கவின் வாடிய தோள்" (குறள் - 1235) என்புழிப் போல, வேறு வினைப் பொருளதாம். அறம் முதலிய உறுதிப் பொருள்கள் நான்கும் தொகுத்து நோக்கும்வழி, அறமாகவே அடங்குதலின், அவை அனைத்தையும், 'அறம்' என்றே கூறுதலும் மரபேயாம். அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர்கட்கு இறைவன் நுண்ணியவாய்ச் செவியறிவுறுத்த, அவற்றைக் கேட்ட நால்வரும், நான்கு வேதங்களில் அவற்றை உலகிற்கு இனிது விளங்க விரித்துரைத்தனர் என்பது கூறப்பட்டது. இதுவே, திருமுறைகளில் வேதத்தைப் பற்றிக்கூறும் உண்மை வரலாறு. எனவே, இறைவனே வேதம், வேதாங்கம் முதலியவற்றை அருளினான் என வருமிடங்கள் எல்லாம் முகமனுரையாய் நின்று, இவ்வுண்மையையே குறிப்பனவாதல் அறிந்துகொள்க. இனி இஞ்ஞான்று வழங்கும் இருக்கு முதலிய வேதங்கள், இந்நால்வராற் செய்யப்பட்டன என்பது துணியப்படு மாறில்லை. அதனால், இவற்றிற்கு வரலாறு வேறு கூறுவார் பக்கம்