பக்கம் எண் :

984
 
671.கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க

நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே

பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற

பெற்றி கேட்டுநின் பொற்கழ லடைந்தேன்



வலியுடைத்து. இன்னோரன்னவை கால வேறுபாட்டால் நிகழ்வன எனப்படும். வேதம் செய்தவர் எய்திய இன்பமாவது, 'நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' (தி. 10 திருமந்திரம் - 85) என்று நன்னெறியை உலகிற்கு உணர்த்தி மகிழ்ந்த மகிழ்ச்சி. எனவே, சுவாமிகளுக்கும் அவ் வின்பம் உளதாயினமை யறிக. ஏதம் செய்தவர் இன்பம் எய்துதல் கூடாமையானும், 'வினை செய்தவர்' என்பது கூறுவேண்டாமை யானும், ஈண்டு மோனை வேண்டுதல் கூடாமை யறிக.

இது, நால்வர் முனிவர்க்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்தது.

7. பொ-ரை: பெண் மயில்கள் போலவும், இளைய பெண் மான்கள் போலவும், இளைய கிளிகள் போலவும், பிறை போலும் நெற்றியையுடைய மகளிர், உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நான்கு கொம்புகளையுடைய யானை, உன்முன் நின்று, தனது உடல், அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே, முன்னை வடிவத்தையும், விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: நான்கு கொம்புகளையுடைய யானை, இந்திரனது, ஐராவதம்; அது, சூரன் மகனால் நான்கு கொம்புகளையும் இழந்து, விண்ணுலகை நீங்கினமையையும், பின்பு திருவெண்காட்டில் சிவபெருமானை வழிபட்டு, முன்போல நாற்கொம்புகளையும் பெற்று, பின்னர் இந்திரனிடம் சென்றமையையும், கந்தபுராணத்தான் அறிக. இவ் யானை, மதுரையிலும் சிவபெருமானை வழிபட்டு, துருவாச முனிவரது சாபத்தினின்றும் நீங்கினமையை, திருவிளையாடற் புராணங் கூறும். "பீடு" என்றது, அதனையுடைய உருவத்தைக் குறித்தது. 'பீடும் பெருமையும் பெற்ற' என்க. ஆண் மயிலே அழகுடையதாயினும், இவர்கள் 'பெண்மயிலாய் இருந்தே